போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்!!
தங்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
முல்லைத்தீவு–கேப்பாபிலவு வான்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும், தனிமைப்படுத்தலிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.