SuperTopAds

மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலமை!!

ஆசிரியர் - Admin
மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலமை!!

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது:-

கோட்டாபாய,மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருப்பதனை அண்மை காலங்களாக அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக உணவுப்பொருட்கள் மற்றும்,எரிபொருள் ஆகியவற்றின் சடுதியானவிலை அதிகரிப்பானது நாட்டுமக்களை,குறிப்பாக உழைக்கும் மக்களை வாட்டிவதைத்து வருகின்றது.

மக்களின் நலனை முன்னிறுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் மீது சுமைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்திய நிலையில், மக்கள் வீதியிலே இறங்கி போராட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பினர்,இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,தேசியகலை இலக்கிய பேரவையினர், புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு உட்பட பொது அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.