பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் பாடசாலை ஆசிரியைகள் தலைமறைவு!!

ஆசிரியர் - Editor II
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் பாடசாலை ஆசிரியைகள் தலைமறைவு!!

பாலியல் வன்புணர்வு வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவின் பாடசாலை ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பாடசாலையை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பாடசாலை முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். 

புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக கூறப்படும் பாடசாலை ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளனர். பொலிஸார் சம்மன் அனுப்பி இருந்தநிலையில் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Radio