கிணற்றுக்குள் விழுந்த சிறுமி!! -வேடிக்கை பார்த்த கூடியவர்களால் இடிந்து விழுந்த கிணற்று சுவர்-

ஆசிரியர் - Editor II
கிணற்றுக்குள் விழுந்த சிறுமி!! -வேடிக்கை பார்த்த கூடியவர்களால் இடிந்து விழுந்த கிணற்று சுவர்-

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. 

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளது. அவரை மீட்கும் முயற்சியில் கிராமத்தினர் ஈடுபட்டனர். 

பலரும் கிணற்றின் அருகில் திரண்டு நின்றதால், கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரத்தால் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். 

50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் சுமார் 20 அடிக்கு தண்ணீர் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டதாகவும், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கிணற்றுக்குள் சிக்கியியுள்ள 15க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு