SuperTopAds

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க பிரமுகர்!! -பொலிஸில் முறையிட்ட பெற்றோருக்கு கத்திக்குத்து-

ஆசிரியர் - Editor II
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க பிரமுகர்!! -பொலிஸில் முறையிட்ட பெற்றோருக்கு கத்திக்குத்து-

இந்தியாவின் மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முறைப்பாடு செய்த பெற்றோருக்கு கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குத்தாலம் - கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பா.ஜ.க பிரமுகரான 60 வயதான ஒருவர் 11 மற்றும் 7 வயது சிறுமிகளிடம் தனது கைபேசியில் உள்ள ஆபாச படங்களை காண்பித்ததோடு மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

இது குறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் முறைப்பாடு செய்த சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்பாக குறித்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று வீடு திரும்பிய சென்று கொண்டிருந்த போது பா.ஜ.க. பிரமுகர் மகாலிங்கம் வீட்டின் அருகே அவரின் மகன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து வழிமறித்து கத்தி மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். 

தடுக்க வந்த சிறுமியின் பெற்றோர் தரப்பை சேர்ந்த சத்தியராஜ் என்பவரையும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்தவர்களை உறவினர்கள் மயிலாடுதுறை அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து குத்தாலம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.