உலகம் முழுதும் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!

ஆசிரியர் - Editor II
உலகம் முழுதும் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலகின் 200 நாடுகளுக்கு மேலாக பரவி விட்டது.

உலகம் முழுதும் கடந்த வாரம் 55 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரத்தை விட 3 சதவீதம் அதிகம். புதிதாக கொரோனா பாதிப்பும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 30 இலட்சம் பேருக்கு கெரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸ் 111 நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Radio