SuperTopAds

குடும்ப பெண்ணை காதல் வலையில் வீழ்த்த வசிய பூஜை!! -இளைஞர் அதிரடி கைது-

ஆசிரியர் - Editor II
குடும்ப பெண்ணை காதல் வலையில் வீழ்த்த வசிய பூஜை!! -இளைஞர் அதிரடி கைது-

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் குண்டல பள்ளி, ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் தினமும் இரவில் சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு அதில் பெண்கள் பேசினார் அவர்களுடன் சில்மிசமாக பேசுவதை வளக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் நல்கொண்டா மாவட்டம் குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு 3 மாதங்களாக பேசி வந்துள்ளார்.

அந்தப்பெண்ணிடம் தன்னை உயர்வாக பேசிய அவர் இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று ஆசைவார்த்தைக் கூறியுள்ளார்.

இருவரும் நேரில் சந்தித்த நிலையில் அந்தப் பெண் திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. அந்தப்பெண்ணுக்கு முரளியை பார்த்ததும் பெரிய ஈர்ப்பு ஏதும் ஏற்படவில்லை. 

இருந்தாலும் தனது வாய்சாலத்தால் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்த நினைத்த முரளி, திருமணம் ஆனாலும் பரவாயில்லை கணவரை விட்டு விட்டு தன்னுடன் வந்துவிடுமாறு ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை வசியப்படுத்த முரளி திட்டமிட்டுள்ளார். வசியப்படுத்துவது எப்படி என்று சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களை பார்த்துவிட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று மனித எலும்புக்கூடுகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு இரவில்  பூஜை நடத்தி உள்ளார்.

அந்தப்பெண் காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை நடத்தியது தெரியவந்தது. வசிய பூஜை பற்றிய தகவல்கள் அந்த கிராம வாசிகளுக்கு தெரியவந்ததையடுத்து கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் அந்த பெண்ணுடன் சேர்ந்து பொலிஸாரிடழம் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்த அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.