வருடத்தில் 300 நாட்களை தூங்கும் நவீன கும்பகர்ணன்!! -அதிர்ச்சியில் வைத்தியர்கள்-

ஆசிரியர் - Editor II
வருடத்தில் 300 நாட்களை தூங்கும் நவீன கும்பகர்ணன்!! -அதிர்ச்சியில் வைத்தியர்கள்-

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம் (வயது 42) பலசரக்குக் கடையை நடத்திவரும் அவருக்கு மிகப்பெரும் பிரச்சினையாக துக்கம் உருவெடுத்துள்ளது. குறிப்பாக அவர் வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களைத் தூங்கியே கழிக்கிறார்.  

ஆரம்பத்தில் ஒரு நாள், 2 நாள்கள், பிறகு ஒரு வாரம் என்றிருந்த இவரது தூக்கம், ஒரு மாதத்துக்கு 25 நாள்கள் எனத் தொடர்ந்து நீண்டுகொண்டே சென்றிருக்கிறது. இதனால், மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே தன்னுடைய பலசரக்குக் வியாபார நிலையத்தை திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அவர். 

தனது கணவனின் விநோதமான தூக்கம், விசித்திரமான செயல்பாடுகளால் அதிச்சியடைந்த புர்காராமின் மனைவி, அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். 

வைத்தியர்கள்  உடனடியாக அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிய முழுப் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில், அவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர். இவரை நவீன கும்பகர்ணன் என அங்கு உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.

அதாவது, ஹஹ ஹஆக்சிஸ் ஹைப்பர்சோமியா’ என்பது ஒரு தூக்க நோய் ஆகும். தூக்கத்திலிருந்து எழ முயற்சி செய்தாலும், அவர்களின் உடல் ஒத்துழைக்காது. 

மேலும், அவர்கள் தூக்கம் வருவதற்கு முன்பாக, கடும் தலைவலியால் அவதிக்குள்ளாவர். இந்த வகையான நோயை முற்றிலுமாக குணப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புர்காராம் சுமார் 23 ஆண்டுகளாகவே இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டு  உள்ளார். சாப்பிட கூட மறந்து தூங்கும் கணவனுக்கு அவருடைய மனைவிதான் தூக்கத்திலேயே உணவு ஊட்டுகிறார். அவரின் குடும்பத்தினரும் பலசரக்குக் கடையைத் திறக்க முடியாமல், வருமானத்துக்கு வழியில்லாமல் திணறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.