யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்துகள் திருப்பி அனுப்பபட்டன!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்துகள் திருப்பி அனுப்பபட்டன!

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய தேவையில்லாமல் மாகாண எல்லையை கடக்க முயன்ற இ.போ.ச பேருந்துகள் திருப்பி அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது. 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் வென்னப்புவ நோக்கி பயணித்த இ.போ. பேருந்தும், 

வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 7 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும் ஈரப்பொியகுளம் பகுதியில் பாதுகாப்பு தரப்பினால் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, 

குறித்த இரு பேருந்துகளிலும் அத்தியாவசிய தேவையுடைய ஒரு சிலரே காணப்பட்டதுடன் பெருமளவானோர் எந்த தேவையும் இல்லாமல் மாகாண எல்லையை கடக்க முயன்றமை தொிவந்துள்ளது. 

இதனையடுத்து இரு பேருந்துகளையும் திருப்பி அனுப்பிய பாதுகாப்பு தரப்பினர் பேருந்தில் இருந்த அத்தியாவசிய துறைசார்ந்தவர்களையும் சேர்த்து திருப்பி அனுப்பியதுடன் அவர்களுக்காக சேவையில் ஈடுபடும்

பொதுப் போக்குவரத்துதுறையை பயன்படுத்தி மாகாண எல்லையை கடக்குமாறும் பணித்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு