இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசய கட்சி!!
விண்வெளியில் செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கி கைகுலுக்குவது போல தோன்றும் அரிய நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை தோன்றவுள்ளது.
மேற்கு வானில் இந்த அற்புதக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை தென்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும் என கூறுகின்றனர். ஆனால் பல மில்லியன் தூரம் இடைப்பட்ட இடைவெளி இருக்கும் என்று தெவித்துள்ளனர்.
செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் 4 டிகிரி தொலைவில் சந்திரன் தென்படும் என்றும் இன்று மாலை மேற்கு வானில் தென்படும் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.
இதுபோல் கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியைத் தொலைநோக்கி போன்று எந்தவிதக் கருவியும் இல்லாமல் பொதுமக்கள் வெற்றுக் கண்களால் காண முடியும் என்றும் இதில் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.