கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு
முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும்இ தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிமின் முயற்சியினால் சுமார் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இன்றையதினம் ( 13) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் சுகாதார அமைச்சரிடம் விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து, (குறிப்பாக ஐசியு பிரிவுக்கு தேவையான) உபகரணங்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமான் அவர்களும் வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.இலாஹி,சிரோஸ்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். ஹாரிஸ்,நிதி உதவியாளர் எஸ்.எல். எம். லாபீர்,மருத்துவ வழங்குனர் எம்.பாயிஸ் கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.