SuperTopAds

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளருக்கு மானபங்களம்!! -உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பெரும் வன்முறை-

ஆசிரியர் - Editor II
வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளருக்கு மானபங்களம்!! -உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பெரும் வன்முறை-

இந்தியாவின் உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை அங்கு 14ற்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை நடைபெற்றது. 

அத்தேர்தலுக்கான நேற்று மனு தாக்கல்கள் முடிந்து உள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி பெண் தொண்டர் ஒருவரை சேலை இழுத்து மானபங்கப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோவிலிருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் நடந்த மோதலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த  பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளார்.

குறித்த பெண் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேட்மனு தாக்கல் செய்ய சென்றுள்ளார். அவர் மற்றொரு கட்சி வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு உள்ளார். 

அவர்கள் அந்த பெண்ணை சரியான நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து உள்ளனர். மேலும் அந்த பெண்ணின் சேலையை உருவி மானபங்கப்படுத்தி உள்ளனர்.