வவுனியாவில் கத்திக்குத்து!! -குடும்பஸ்தர் அவசரசிகிச்சை பிரிவில்-
வவுனியாவில் பெரியார்குளம் பகுதியில் நடந்த கத்திக்குத்துச்சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் நேற்று இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி ஓட்டோவில் சென்றுள்ளார். இதன் போது பெரியார்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த குறித்த ஓட்டோவை வழிமறித்து அதில் இருந்தவர்ள் மீது சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் கத்திக்குத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.