அடுப்பு மூட்ட சானிட்டைசர் ஊற்றிய சிறுவன் பற்றிக் கொண்ட தீ!! -கூட்டாஞ்சோறு சமைத்த போது பரிதாப பலி-
இந்தியா திருச்சியில், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், சானிட்டைசரை ஊற்றி அடுப்பு பற்றவைத்தபோது உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட நுடீ ரோட்டைச் சேர்ந் ஸ்ரீராம், அங்குள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பேரிடர் காரணமாக வீட்டில் இருந்தே பயின்று வந்த நிலையில், ஸ்ரீராமும் நண்பர்களும் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்க முடிவு செய்துள்ளனர்.
வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பை மூட்ட, ஸ்ரீராம் முயற்சித்துள்ளான். வழக்கமாக மண்ணெண்ணெய் ஊற்றி விறகை பற்ற வைப்பதை பார்த்துள்ள சிறுவன், நீலநிறத்தில் இருந்த சானிட்டைசரை ஊற்றி பற்ற வைத்துள்ளான்.
அப்போது கொழுந்துவிட்டு எரிந்த தீ சிறுவனின் உடலில் பரவிக் கொண்டுள்ளது. அவனது நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்து வந்து உடனடியாக தீயை அணைத்துள்ளனர்.
சிறுவனை மீட்ட அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.