SuperTopAds

கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,686 குழந்தைகள்!! -100ற்கும் அதிகமான குழந்தைகளுக்கு திடீர் திருமணம்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,686 குழந்தைகள்!! -100ற்கும் அதிகமான குழந்தைகளுக்கு திடீர் திருமணம்-

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனாவால் 100ற்க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் திருச்சியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்:- 

தமிழகத்தில் 93 குழந்தைகள் கொரோனாவினால் தாய், தந்தை இருவரையும் இழந்ததுள்ளனர். மேலும் 3,593 குழந்தைகள் பெற்றோரில் தாய் அல்லது தந்தையை இழந்ததுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் 100ற்க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் அனுமதி பெறாத குழந்தைகள் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.