முடக்கப்பட்டுள்ள பகுதியலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி! அச்சத்தில் அயல் கிராமங்களை சேர்ந்த மக்கள்..
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் முடக்கப்பட்ட பகுதியிலிருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடிய மாகாண எல்லையை கடந்துள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியிருக்கின்றனர்.
நாயாறு பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியுள்ள பகுதியில் கடந்த மாதம் 28ம் திகதி நடத்தப்பட்ட எழுமாறான பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து 2ம் திகதி 74 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால் 3ம் திகதி தொடக்கம் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியுள்ள கரையோர பகுதி முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட பின்னர் தொற்றுக்குள்ளான நபர் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றாளர் தப்பி ஓடும் அளவுக்கு பாதுகாப்பு பலவீனம் காணப்பட்டதா?
என மக்கள் விசனம் தொிவித்துள்ளதுடன், தப்பி ஓடிய நபரால் பாதிப்பு ஏற்படும் என அயல் கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.