ஓய்வு பெறப்போவதாக அறிவித்த மெத்யூஸ்!!
இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான அஞ்சலோ மெத்யூஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் தனது இறுதி முடிவை தெரிவிப்பதாகவும் அவர் இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார் என்றும் உறுதிபடுத்தப்பட்ட வாட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
2008 நவம்பர் 27 சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான மெத்தியூஸ் இறுதியாக கடந்த மார்ச் 9 மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13,219 ஓட்டங்களையும் 191 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் மெத்யூஸ். இலங்கை கிரிக்கெட் தற்போது எதிர் கொண்டுள்ள சிக்கலான நிலையில் அவரின் ஓய்வு மேலும் அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும்.