SuperTopAds

14 வயதான சிறுவன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
14 வயதான சிறுவன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

வெட்டுக் காயங்களுடன் பாடசாலை மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

குறித்த சம்பவம் வவுனியா - தோணிக்கல் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த மாணவன் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். தூக்கத்திற்கு சென்ற மகனை இன்று காலை எழுப்புவதற்காக 

பெற்றோர் சென்ற நிலையில் மகனை காணவில்லை. பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் முகப்பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடப்பதனை கண்டுள்ளனர்.

குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட நிலையில் பலத்த காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை

முன்னெடுத்து வருகின்றனர்.வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜீவன் என்ற சிறுவனே 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் 

விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.