கொரோனாவுக்கு தகுந்த சிகிச்சை முறையை கண்டுபிடித்த அமெரிக்கா விஞ்ஞானிகள்!! -எலிகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை-

ஆசிரியர் - Editor II
கொரோனாவுக்கு தகுந்த சிகிச்சை முறையை கண்டுபிடித்த அமெரிக்கா விஞ்ஞானிகள்!! -எலிகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை வழங்கி பரிசோதிக்கப்பட்ட போது அதன் இறப்புகள் குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலக நாடுகளில் பல தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை வழங்கல் முறை சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் தேசிய அறிவியல் அகாடமி நடவடிக்கைகள் மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு