SuperTopAds

ஒன்றரை ஆண்டுகளாக உலகை மிரட்டும் கொரோனா!! -18.45 கோடி பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
ஒன்றரை ஆண்டுகளாக உலகை மிரட்டும் கொரோனா!! -18.45 கோடி பேருக்கு தொற்று-

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த  எண்ணிக்கை 18,45,62,051 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறையவில்லை.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18,45,62,051 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 16, 89,07,181 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 39,93,319 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.