SuperTopAds

வற்றாப்பளையில் நேர்த்திக்கடன் செலுத்திய அமைச்சர் பவித்ரா!

ஆசிரியர் - Admin
வற்றாப்பளையில் நேர்த்திக்கடன் செலுத்திய அமைச்சர் பவித்ரா!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நேர்த்திக் கடன் வைத்திருந்த நிலையில், அதனை நிறைவேற்றும் முகமாக, கோவிலுக்கு வருகை தந்தார்.

இது தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது. தனிப்பட்ட நிகழ்வாக அமைச்சர் வழிபாடுகளில் கலந்து கொள்ள வந்துள்ள நிலையில், அதனை ஒளிப்பதிவு செய்யவோ, புகைப்படங்களை எடுக்கவோ ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.