இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுத்தந்தார் லக்மால்
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும், 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சதுரங்க லக்மால் ஜயசூரிய பெற்றுக்கொடுத்துள்ளார்.
ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் லக்மால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் மலேசியா தங்கப்பதக்கத்தையும், இந்தியா வௌ்ளிப் பதக்கத்தையும் வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.