SuperTopAds

உலகின் மிகச்சிறிய விடுதி: எங்கிருக்கிறது தெரியுமா?

ஆசிரியர் - Admin
உலகின் மிகச்சிறிய விடுதி: எங்கிருக்கிறது தெரியுமா?

நாம் பெரும்பாலும் 5 ஸ்டார் ஓட்டல், 3 ஸ்டார் ஓட்டல் என நீங்கள் பல விதமான ஓட்டல்களை கேள்விப்பட்டுருப்போம். ஆனால் உலகிலேயே சிறிய ஓட்டல் எங்கிருக்கிறது தெரியுமா? இதை பற்றி தெரிந்தால் ஆச்சரிப்படுவீர்கள். உலகின் மிகச்சிறிய ஓட்டலை "மினி ஹோட்டல்" என அழைக்கிறார்கள். இந்த மினி ஓட்டல் ஒரு கட்டிடம் அல்ல ஒரு சிறிய காரை ஓட்டலாக மாற்றியுள்ளனர்.

மேலும், இந்த ஓட்டல் அரபு நாடான ஜோர்டனில் உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த முகம்மது அல்-மல்லாஹிம் என்பவர் நடத்தி வருகிறார்.

அவர்து தனது போக்ஸ்வாகன் பீட்டில் காரை ஓட்டலாக மாற்றியுள்ளார். இதுதான் உலகத்தின் மிகச்சிறிய ஓட்டலாம்.

இந்த ஓட்டலில் இருக்கும் ஒரே பிரச்சனை ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே தங்க முடியும். அதனால் இது தம்பதிகளாக தங்குபவர்கள் ஹனிமூன் செல்பவர்களுக்கு சிறந்த ஓட்டலாம்.

ஓட்டலில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 56 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 4 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ஓட்டலில் தங்க நீங்கள் நினைத்த நேரத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. இதற்காக ஆன்லைன் புக்கிங் நடந்து வருகிறது. இந்த ஓட்டலில் தங்க நீண்ட வரிசையில் பலர் காத்திருக்கிறார்கள்.

அவர்கள் இந்த ஓட்டலில் தங்குவதற்காகவே இந்த ஊருக்கு டூர் வருகிறார்கள். மேலும், இந்த ஓட்டலில் தங்குவதற்கு பலர் மாத கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஹோட்டலின் சிறப்பு அம்சங்கள் என்ன? இந்த ஓட்டலில் உள்ள மெத்தைகள் தலையனைகள் எல்லாம் கையால் எம்பராய்டரி போடப்பட்ட துணிகளால் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டலில் தங்குபவர்களுக்கு அந்நாட்டின் பானம் மற்றும் நொறுக்கு தீனிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஓட்டல் இருக்கும் பகுதிக்கு அருகே ஒரு குகை இருக்கிறதாம். அங்கும் சிலர் வந்து தங்கி செல்கின்றனர்.

இந்த "மினி ஹோட்டல்" ஜோர்டன் நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்த ஓட்டலை பற்றி தெரியுமாம்.

இந்த ஓட்டலின் உரிமையாளர் முகம்மது அல் - மாலாஹிம் இந்த ஓட்டல் போன்ற ஒன்றை திறக்கவேண்டும் என நீண்டநாள் கனவு கண்டு இதை செய்துள்ளாராம். 365 நாட்களும் புக்கிங் வந்து கொண்டே தான் இருக்குமாம்.