தென்னிலங்கை மீனவர்கள் தங்கியிருந்த பகுதி முடக்கம்! கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்த 5 நோயாளிகளால் பரபரப்பு..
முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் நேற்றுமுன்தினம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியுள்ள பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதற்கிடையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுத்தமையால் அப்பகுதியில் நேற்றய தினம் பரபரப்பான நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பபட்டனர்.
புத்தளம், கறுக்குப்பனை, வெண்ணப்புவ பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் நாயாற்றில் வாடி அமைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசேதனையின்போது,
5 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 02.07.21 நேற்று நாயாற்று பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் தங்கியிருக்கும் வாடி பகுதியிலிருந்து வெளியேறவும், உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டது.
மேலும் அனைவருக்கும் அன்டிஜன்,பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேரை நேற்றய தினம்
கொரோனா மருத்துவமனை கொண்டு செல்வதற்காக சுகாதர பிரிவினர் பேருந்தினை கொண்டு சென்றபோது அவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து வில்லத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
எனினும் சுகாதார பிரிவினர் நாட்டில் உள்ள சட்டத்தினை பயன்படுத்தி நீண்ட நேரத்தின் பின்னர் 5பேரையும் கொவிட் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.