SuperTopAds

கொரோனா அச்சுறுத்தல்- மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டது-வைத்தியர் ஜி.சுகுணன்

ஆசிரியர் - Editor III
கொரோனா அச்சுறுத்தல்- மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டது-வைத்தியர் ஜி.சுகுணன்

கொரோனா அச்சுறுத்தல்  நிலைமையைக் கருத்தில் கொண்டு மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முற்று முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது  என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(2) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

கொரோனா அச்சுறுத்தல்  நிலைமையைக் கருத்தில் கொண்டு மருதமுனை பகுதியில்  நேற்று முந்தினம் எடுக்கப்பட்ட 128 பி.சி ஆர் மாதிரிகளில் 100 மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து உடன் அமுலுக்கும் வரும் வகையில் இன்று  மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முற்று முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று  அவசரமாக கல்முனை மநகர சபை முதல்வர் சிரோஸ்ட சட்டத்தரணி ஏ.எம்

ரக்கீப் தலைமைமையில் எடுக்கப்பட்ட அவசர தீர்மானத்தின் பிரகாரம் சுகாதார துறையினரோடு இணைந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே மருதமுனை பிரதேசம் ஆபத்துள்ள பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதை விட சாய்ந்தமருது காரைதீவு ஆலையடிவேம்பு பகுதிகளிலும் கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு  கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது.பெருநாள் காலமும் ஆரம்பமாக இருக்கின்றது.கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள பல பிரதேசங்கள் எதிர்காலத்தில்  அதிகளவாக தனிமைப்படுத்தப்பட விருக்கின்றன.எனவே எல்லோரும் இணைந்து இதனை தடுக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.