SuperTopAds

இலங்கை அணியை துவைத்து காயப்போட்ட இங்கிலாந்து!!

ஆசிரியர் - Editor II
இலங்கை அணியை துவைத்து காயப்போட்ட இங்கிலாந்து!!

இலங்கை அணி வீரர்களை திணறவைத்த கிறிஸ் வோக்ஸின் மிரட்டலான பந்து வீச்சால் முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா மாத்திரம் இங்கிலாந்தின் பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடித்தாட ஏனைய முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் பெரேரா - வர்னிந்து ஹசரங்க ஜோடி, இங்கிலாந்தின் பந்து வீச்சுகளை சாமர்த்தியமாக எதிர்கொண்டு ஆடுகளத்தில் நிலைத்தாடியது.

இவர்கள் இருவரும் மொத்தமாக 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக அணிக்கு பெற்றுக் கொடுத்தனர்.

28.4 ஆவது ஓவரில் ஹசரங்க மொத்தமாக 65 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களுடன் கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

குசல் பெரேராவும் மொத்தமாக 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத இலங்கை 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 10 ஓவர்களுக்கு 10 பரிமாற்றம் மேற்கொண்டார். அதில் 5 ஓவர்களுக்கு எதுவித ஓட்டங்களையும் வழங்காது ஏனைய ஓவர்களில் 18 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, வில்லி 3 விக்கெட்டுகளையும், மொய்ன் அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

186 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோனி பெயர்ஸ்டோ, லிவிங்ஸ்டனுடன் இணைந்து அதிரடி காட்டினார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றி வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் ஜோ ரூட் 79 ஓட்டங்களுடனும், சாம் குர்ரன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் துஸ்மந்த சாமர 3 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ, சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தெரிவானார்.