புதைக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலங்கள்!! -வெள்ளத்தில் மிதந்துவரும் பரிதாபம்-
இந்தியாவில் பருவமழை காரணமாக, கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகின்றது. இதனால் கங்கை நதிக்கரைகளில் மேலோட்டமாக புதைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் நீரில் மிதப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இறுதிச் சடங்குகளுக்காக இலட்சக்கணக்கில் மக்கள் குவியும் அலகாபாதில் மட்டும் கடந்த 3 வாரங்களில் நீரில் மிதந்த சுமார் 150 சடலங்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.