SuperTopAds

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!! -திருமணமான 6 மாதத்திலே துயர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!! -திருமணமான 6 மாதத்திலே துயர சம்பவம்-

இந்தியா - சென்னை கோயம்பேடு, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் 25 வயதான சந்திரசேகர் ஹோட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 19 வயதான ஜெயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

குடிப்பழக்கம் உள்ள சந்திரசேகர் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் விரக்தி அடைந்த ஜெயலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கோயம்பேடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.