SuperTopAds

ஆச்சரியப்படவைத்த வினோத திருமணம்!!

ஆசிரியர் - Editor II
ஆச்சரியப்படவைத்த வினோத திருமணம்!!

இந்தியாவின் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிச்சர்லபள்ளி என்ற கிராமத்தில் அங்கையா- அருணா என்ற இருவரும் விநோதமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

திருமணம் முடிந்தவுடன் மணமகன் அங்கையா பெண் போல சேலை அணிந்தும், மணமகள் அருணா ஆண் போல் குர்தா பைஜாமா உடை அணிந்தும் கிராம தேவதை கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். 

அந்த மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பரம்படையினருடைய குடும்பங்களில் இதுபோன்ற பாரம்பரிய முறை கடைபிடிக்கப்படுகிறது. பாரம்பரியமாக பல்வேறு ஆண்டுகளாக இந்த முறையை அந்த கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.  

குறிப்பாக மணமகன் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும் என்பது அவர்களின் விதிமுறையாக இருந்து வருகின்றது.