செவ்வாயில் செயலாற்றும் சீன விண்கலம்!! -3 வீடியோக்கள் வெளியீடு-
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய சீன நாட்டின் விண்கலம் அங்கு செயலாற்றும் 3 வீடியோக்களை சீன விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது.
சீனா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ரோவர் என்ற விண்கலத்தை மே மாதம் செவ்வாயில் தரை இறங்கியது. 240 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் உயரத்தில் உள்ள படங்களை எடுப்பதுடன், வழி செலுத்தும் வகையிலான காமெராக்களையும் கொண்டுள்ளது.
இந்த நிலையில் செவ்வாயில் தரை இறங்கிய விண்கலம் குறித்த 3 வீடியோக்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு குறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.