துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்து தகவல் தந்தால் 8 இலட்சம் டொலர் பணப்பரிசு!!
கொலம்பிய ஜனாதிபதி பயணித்த உலங்குவானூர்தி மீது துப்பாக்கியால் சுட்டவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி இவான் டியூக், தலைநகர் போகோடாவில் இருந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெனிசுலாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோகட்டா நகருக்கு உலங்கு வானூர்தி மூலம் பயணம் மேற்கொண்டார்.
இதன் போது தீவிரவாதிகள் அவரது உலங்கு வானூர்தியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இவான் டியூக் காயமின்றி அதிர்ஸ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இதையடுத்து தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் 3 பில்லியன் கொலம்பிய பெசொஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதலின் போது கோகட்டா எல்லையில் ஏ.கே 47 மற்றும் 7.62 கேலிபர் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.