SuperTopAds

இந்தியாவில் 40.63 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை!! -மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் 40.63 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை!! -மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்-

இந்தியாவில் இதுவரை 40.63 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்து உள்ளது.

அந்நாட்டில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,70,515 பேரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 40,63,71,279 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.