SuperTopAds

உறவினர்களுக்கு ஆட்டுக்கறி போடாததால் கோபம்!! -மணப்பெண்ணை மாற்றிய வேறு பெண்னுடன் திருமணம்-

ஆசிரியர் - Editor II
உறவினர்களுக்கு ஆட்டுக்கறி போடாததால் கோபம்!! -மணப்பெண்ணை மாற்றிய வேறு பெண்னுடன் திருமணம்-

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணத்தின் போது உறவினர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

ஓடிசாவை சேர்ந்த மணமகனுக்கு என்பவருக்கு கடந்த புதனன்று ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தனது உறவினர் புடைசூழ சென்ற போது மணமகள் வீட்டார் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்ட போது ஆட்டுக்கறி போடவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். பின்னர் அதே நாளில் மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து ஊர் திரும்பி உள்ளனர்.