SuperTopAds

முககவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளர்!! -துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி-

ஆசிரியர் - Editor II
முககவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளர்!! -துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி-

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலியை சேர்ந்த ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ராஜேஸ் ரத்தோர் என்பவர் தனது வங்கி கணக்கு புத்தகத்தில் பரிமாற்ற விவரங்களை பதிவேற்றுவதற்காக அங்குள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளைக்கு சென்றார்.

ஆனால் அவர் முககசவம் அணியாததால், வங்கி ஊழியர்கள், அவருக்கு எந்தவித சேவையையும் வழங்கவில்லை. எனவே அவர் வெளியில் சென்று முககவசம் ஒன்றை வாங்கி அணிந்து வந்தார். 

அப்போது அவரை உள்ளே விட வங்கி காவலாளி மறுத்தார். முககவசம் அணியாதது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த காவலாளி, அவர் மீது துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இடது தொடையில் குண்டுபாய்ந்து பலத்த காயம் அடைந்தார். சம்பவ இடத்திற்க வந்த அவரின் மனைவி அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.