கொரோனாவில் இருந்து மீண்டாலும் 3 மாதங்களுக்கு அறிகுறி இருக்கும்!! -ஆய்வில் தகவல்-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக வல்லுனர்கள் ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் 48.2 சதவீதம் பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று மீண்டவர்கள். மற்றவர்கள் வீட்டு தனிமையில் இருந்தவர்கள்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் இணை நோய்களுடன் காணப்பட்டனர். அதில் 23 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய், 19 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம், 3.2 சதவீதம் பேருக்கு இதயநோய், 1.1 சதவீதம் பேருக்கு ஆஸ்துமாவும் இருந்தது.
தில் இருந்து மீண்டு வந்தவர்கள் இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை, உடல் எடை குறைவு, முடி உதிர்தல், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள்.
கொரோனாவிலிருந்து குணமடைந்த பின் அறிகுறிகள் இருப்பதாக புகார் தெரிவித்தவர்களில் 57 சதவீதம் ஆண்கள், 43 சதவீதம் பேர் பெண்கள் ஆகும். இவர்களில் 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 40 சதவீதம் பேரும், 30 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 24 சதவீதம் பேரும் தொடர் அறிகுறிகளால் இருக்கிறார்கள்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்தவர்களில் 4 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு அவர்களில் 4 சதவீதம் பேருக்கு குணமடைந்த பிறகு அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை விட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் தான் கொரோனா அறிகுறி அதிகமாக உள்ளது. தொடர்ந்து இந்த அறிகுறிகள் 3 மாதம் வரை இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.