SuperTopAds

கணவனின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த மனைவி!! -வேறு திருமணம் செய்ய முயன்றதால் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
கணவனின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த மனைவி!! -வேறு திருமணம் செய்ய முயன்றதால் சம்பவம்-

தன்வை விட்டுவிட்டு 3 ஆவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிய கணவரின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த 2 ஆவது மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் உத்தரபிரதேசம் முசாபர்நகர் சிகார்பூர் கிராமத்தை சேர்ந்த 57 வயதான மவுலவி வகீல் அகமதுக்கு இரு மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பெயர் ஹாஜ்ரா.

கடந்த சில நாட்களாக வகீல் அகமது 3 ஆவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி வந்தார். இதற்கு ஹாஜ்ரா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் கூர்மையான ஆயுதத்தால் வகீல் அகமதுவின் பிறப்புறுப்பை துண்டித்தார். இதில் இரத்தம் சொட்ட சொட்ட அதே இடத்தில் வகீல் உயிரிழந்தார். உடனடியாக ஹாஜ்ரா தனது உறவினர்களின் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்ய முயன்றார். 

இருப்பினும் அயலவர்கள் கொடுத்த புகாரினால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.