SuperTopAds

தடுப்பூசி போடுமாறு ஒருவரை நிர்பந்திப்பது மனித உரிமை மீறலாகும்!! -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போடுமாறு ஒருவரை நிர்பந்திப்பது மனித உரிமை மீறலாகும்!! -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஒருவரை கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என மேகாலய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநில பொது சேவைகளில் ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தது.

இந்நிலையில், குறித்த விவகாரம் மேகாலய உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன் போது கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி கட்டாயம் என்றும், தற்போதைய தேவையாக தடுப்பூசி உள்ளது எனவும் தெரிவித்த நீதிபதிகள் தடுப்பூசி செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவது என்றும் கருத்து தெரிவித்தனர்.

அரசியல் அமைப்பின் கீழ் கூறப்பட்ட வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் மாநில அரசால் எடுக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.