SuperTopAds

இரண்டாது முறையும் வீழ்ந்தது இலங்கை!! -தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து-

ஆசிரியர் - Editor II
இரண்டாது முறையும் வீழ்ந்தது இலங்கை!! -தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து-

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று தொடரை இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் முதலாவதாக நடைபெற்ற ரி-20 போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடரின் இரண்டாவது பேட்டி நேற்றிரிவு கார்டீப், சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் நடந்தது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அதிகபடியாக குசல் மெண்டீஸ் 39 ஓட்டங்களையும், குசல் பெரேரா 21 ஒட்டங்களையும் பெற ஏனைய வீரர்கள் செததப்பினர். 112 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் சரிவினை கண்டது.

ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜோனி பெயர்னஸ்டோ பினுர பெர்னாண்டோவின் இரண்டாவது பந்து வீச்சில் எதுவித ஓட்டமின்று டக்கவுட்டுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து ஆடுகளம் நுழைந்த டேவிட் மலனும் நான்கு ஓட்டத்துடன் துஷ்மந்த சமாரவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்.யூ ஆனார். இதனால் இங்கிலாந்து 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இலங்கையின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் இங்கிலத்துக்கு மிரட்டல் விடுத்தனர். அணித் தலைவர் மோர்கன் 11 ஓட்டங்களுடனும், ஜேசன் ரோய் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்hர்.  ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 5.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 30 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அதன் பின்னர் மழையின் ஆட்டம் ஆரம்பிக்க, போட்டி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டபோது டக்வெத் லூவிஸ் முறைப்படி இங்கிலாந்தின் வெற்றிக்காக 18 ஓவர்களுக்கு 103 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக சாம் பில்லிங்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் களமிறங்கி விக்கெட்டினை பறிகொடுக்காது ஓட்ட இலக்கை நோக்கி கவனம் செலுத்தினர்.

14 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களை பெற்ற வேளையில், 15 ஆவது ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் சாம் பில்லிங்ஸ் 24 ஓட்டங்களுடன் ஹசரங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சாம் குர்ரன் களமிறங்கி துடுப்பெடுத்தாட, இங்கிலாந்து 16.1 ஓவர்கள் நிறைவில் 108 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் லியாம் லிவிங்ஸ்டன் 29 ஓட்டங்களுடனும், சாம் குர்ரன்  16 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டக்காரராக லியாம் லிவிங்ஸ்டன் தேர்வாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இங்கிலாந்து 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான 3 ஆவது ரி-20 போட்டி நாளை சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.