SuperTopAds

மகள் தூக்கிட்டு தற்கொலை!! -அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சோகம்-

ஆசிரியர் - Editor II
மகள் தூக்கிட்டு தற்கொலை!! -அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சோகம்-

பாடசாலை சேர்க்கை விடயத்தில் தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

இந்தியாவின் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் 65 வயதான ராஜ்சும், அவரது 17 வயது மகளான பந்தவ்யாவும் வாழ்ந்து வந்தனர். பந்தவ்யா அண்மையில் அங்குள்ள பாடசாலையில் சேர்ந்தார். 

பாடசாலை சேர்க்கை விடயம் தொடர்பாக தந்தை, மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகராறு நேற்று முன்தினம் இரவும் நடந்ததாக தெரிகிறது. 

இதனால் பந்தவ்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறைக்கு சென்ற பந்தவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நேற்று காலை தனது மகள் அறைக்கு சென்ற தந்தை, மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். 

உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளியில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.