இலங்கையில் தொடரும் பேராபத்து..! 2205 பேருக்கு தொற்று. 65 பேர் மரணம், பயனற்றுபோகிறதா? பயணத்தடை மற்றும் சுகாதார நடைமுறைகள்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் தொடரும் பேராபத்து..! 2205 பேருக்கு தொற்று. 65 பேர் மரணம், பயனற்றுபோகிறதா? பயணத்தடை மற்றும் சுகாதார நடைமுறைகள்..

நாட்டில் பயணத்தடை மற்றும் இறுக்கமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அமுலில் உள்ள நிலையிலும் தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து நிற்கிறது. 

நேற்றய தினம் மட்டும் சுமார் 2205 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

அதன்படி,  மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 246,091 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் நேற்றைய தினம் இலங்கையில்; 65 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 25 பெண்களும் மற்றும் 40 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,769 ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு