ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என அறிவித்த வடகொரியா!! -சந்தேகம் வெளியிடும் உலக சுகாதார அமைப்பு-

ஆசிரியர் - Editor II
ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என அறிவித்த வடகொரியா!! -சந்தேகம் வெளியிடும் உலக சுகாதார அமைப்பு-

வட கொரியாவில் உள்ள ஒருவருக்குக் கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உலக சுகாதார அமைப்பிடம் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம், வட கொரியா அளித்துள்ள அறிக்கையில், ஜூன் 10 ஆம் திகதி வரை அறிகுறிகளுடன் இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்ததாகவும், அதில் யாருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மோசமான சுகாதாரக் கட்டமைப்பு, சீனாவுடன் எல்லைப் பகிர்வு, எந்த ஒரு பொருளாதாரத் தேவைக்கும் சீனாவைச் சார்ந்திருக்கும் வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு