SuperTopAds

இந்தியாவை அச்சுறுத்தும் கரும்பூஞ்சை!! -மஹாராஸ்டிராவில் 729 பேர் மரணம்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவை அச்சுறுத்தும் கரும்பூஞ்சை!! -மஹாராஸ்டிராவில் 729 பேர் மரணம்-

இந்தியாவின் மஹாராஸ்டிராவில் கரும்பூஞ்சை நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில் 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை 'மியூகோர்மைகோசிஸ்' என்ற கரும்பூஞ்சை பாதிக்கிறது. இந்நிலையில் மஹாராஸ்டிரா சுகாதாரத் துறை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

மஹாராஸ்டிராவில் ஜூன் 19 ஆம் திகதி காலை 11 மணி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சையில் உள்ளனர்.