இலங்கையிலிருந்து கடல்வழியாக தமிழகம் சென்று அங்கிருந்து கனடா செல்ல முயற்சி! சூத்திரதாரியை தேடி தீவிர விசாரணை..
இலங்கையிலிருந்து கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து அங்கிருந்து கனடா செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 பெரை வேதாளை கடற்கரைக்கு அழைத்து வந்த பொலிஸார் இன்று விசாரணை செய்தனர்.
மேலும் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களுக்கு தங்க அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளி தலைமறைவானதால் அவர் குறித்தும் மங்களூர் தனிப்படை பொலிஸார் மரைக்காயர் பட்டிணத்தில் தீவிர விசாரணை நடத்தி சென்றனர்.
இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 34 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கள்ளதோணியில் கனடா செல்வதற்காக கடந்த மாதம் 27ம் திகதி புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்டனர்.
அவர்கள் மறுநாள் அதிகாலை ராமநாதபுரம் மாட்டம் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கiயை வந்து சேர்ந்தனர். பின்னர் வேதாளையில் இருந்து மங்களூர் சென்று கடல் வழியாக கனடா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது
கடந்த 11ம் திகதி மங்களூர் பொலிஸாரினால் 34 இலங்கை தமிழர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 34 இலங்கை தமிழர்களில்; நான்கு பேரை மட்டும் போலீஸ் காவலில் எடுத்த மங்களூர் பொலிஸார் அவர்களிடம் இருந்து
முக்கிய ஆவணங்களை திரட்டுவதற்காக விசராணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட 4 இலங்கை தமிழர்களை ராமேஸ்வரம் அடுத்துள்ள வேதளை கடற்கரைக்கு அழைத்து வந்த மங்களூரை சேர்ந்த ஆய்வாளர்,
சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 7 பேர் கொண்ட தனிப்படை இலங்கையிலிருந்து எப்படி கடற்கரையில் வந்து இறங்கினார்கள், அங்கிருந்து எப்படி மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர் என்பது குறித்து
அவர்களை வைத்து ஒத்திகை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.மேலும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களை அடைக்கலம் கொடுத்து தங்க உதவிய முக்கிய குற்றவாளியான இம்ரான் கான் தலைமறைவாகியுள்ளதால்
மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றனர் அப்போது வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.விசாரணையில் இம்ரான் கான் ஒரு வாரத்திற்கு மேலாக மரைக்காயர்பட்டிணத்தில் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து
அடுத்த கட்ட விசாரணை செய்வதற்காக தற்போது கைது செய்யப்பட்டு மங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 இலங்கைத் தமிழர்களை கடற்கரை வழியாக எங்கெல்லாம் அவர்கள் சென்றார்கள் யாரெல்லாம் சந்தித்தார்கள்
என் ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாரின் உதவியுடன் மங்களூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.