பிரமாண்ட பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா!! -அமெரிக்கா நடத்திய சோதனை வெற்றி-

ஆசிரியர் - Editor II
பிரமாண்ட பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா!! -அமெரிக்கா நடத்திய சோதனை வெற்றி-

அமெரிக்காவில் பலூன் மூலம் விண்வெளிச் சுற்றுலா செல்லும் திட்டம் குறித்து செய்யப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட பிரமாண்டமான பலூன் பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த நிலையில், சுமார் 6 மணி நேர பயணத்திற்குப் பின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பாதுகாப்பாக இறங்கியது.

வான்வெளியில் சுமார் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 409 அடி உயரத்தில் இந்த பலூன் பறக்கவிடப்பட்டது. பலூன் பத்திரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு முதல் பயணிகளை ஏற்றி பறக்கும் நடைமுறைகள் தொடங்கும் என விண்வெளி பலூன் நிறுவனமாக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு