தடுப்பூசி போட வரும் மருத்துவர்களை கண்டு ஒடி ஒளியும் மக்கள்!!

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போட வரும் மருத்துவர்களை கண்டு ஒடி ஒளியும் மக்கள்!!

இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் 28 ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது பெரும் சவாலாக உள்ளது.

மருத்து அதிகாரிகள் தடுப்பூசி போட வருவதாக தெரிந்தால், வனப்பகுதிக்குள் ஒடி ஒளிந்து கொள்வது, வீட்டை வெளியே பூட்டிவிட்டு உள்ளே இருப்பது, அப்படியும் மீறி உள்ளே வந்தால் கட்டிலுக்கு அடியிலும், போர்வை குவியலிலும் பதுங்கிக்கொள்வதுமாக இருக்கின்றனர்.

தடுப்பூசி போட வரும் மருத்துவ அதிகாரிகளை சில மக்கள் கடுமையாக திட்டவும் செய்கிறார்கள். அவர்களின் மொழியில் பேசி விளக்கம் கொடுத்து, தடுப்பூசி போடும் பணிகளில் மருத்துவரும், மருத்துவப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சவாலான பணியாகவே உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு