யாழ்.கைதடி சித்த வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு! மருத்துவர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க மாகாண சுகதார அமைச்சுக்கு மனமில்லையாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி சித்த வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு! மருத்துவர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க மாகாண சுகதார அமைச்சுக்கு மனமில்லையாம்..

யாழ்.கைதடி சித்த ஆயுள்வேத வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை குறித்த வைத்தியசாலை பணியாளர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ தடுப்பூசி வழங்கப்படவில்லை.

யாழ்.மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபாம் தடுப்பூசிகளில் மிகுதியாக இன்னும் 400 தடுப்பூசிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சித்த ஆயுள்வேத வைத்திய சாலையில் பணியாற்றுகின்ற சுமார் 60 வைத்தியர்களுக்கு 

கொரோனா தடுப்பூசியை வழங்குவதை யார் தடுக்கிறார்கள் ? என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான சினோபாம் தடுப்பூசியை யாருக்கு வழங்க வேண்டும் என முடிவு எடுப்பதில் 

மாகாண சுகாதார பணிப்பாளரை காட்டிலும் மாகாண தொற்று நோய் பிரிவு அதிகாரியே முடிவுகளை மேற்கொண்டதாக மாகாண சுகாதார அமைச்சுக்குள்ளே பலர் அரசல் புரசலாக பேசிவருகின்றனர். இவ்வாறான நிலையில் ஆயுள்வேத வைத்தியர்கள், ஊழியர்க் விடயத்தில்

மாகாண சுகாதார அமைச்சு அசண்டையீனமான இருக்கிறது என ஆயுள்வேத துறைசார்ந்தோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பொறுப்புவாய்ந்தோர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு