யாழ்.மாதகல் கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் 93 கிலோ கஞ்சா மீட்பு! கடப்படையினர், பொலிஸார் விசாரணை..

யாழ்.மாதகல் கடலில் மறைத்து வைக்கப்பட்ட 93 கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று தினம் சனிக்கிழமை மாலை பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாதகல் கடற்பரப்பில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டு நங்கூரத்தில் கடலில் இறக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட
கஞ்சாவே மீட்கபபட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கடற்படையினரும்
பொலிசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.