யாழ்.சாவகச்சோி பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத்திட்டம் வழங்கலில் அரசியல் தலையீடு! பட்டியல் வழங்கும் அரசியல்வாதி, அதிகாரிகளுக்கு மிரட்டல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத்திட்டம் வழங்கலில் அரசியல் தலையீடு! பட்டியல் வழங்கும் அரசியல்வாதி, அதிகாரிகளுக்கு மிரட்டல்..

யாழ்.பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தொிவில் பாரிய அரசியல் தலையீடு காணப்படுவதாகவும், வீட்டுத்திட்டம் பெறுவதற்கு தகுதியற்ற பலருக்கு வீட்டுத்திட்டம் வழங்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. 

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இருவருடைய அழுத்தங்கள் அதிகாரிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகவும், பிரதேச செயலக உயர் அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரின் பரிந்துரைகளை ஓரமாய் வைத்துவிட்டு,

நாடாளுமன்ற உறுப்பினரின் சிபார்சுகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதேச செயலக வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல்கள் அடிப்படையில், 

நாட்டில் ஒன்றுகூடல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அரச அலுவலகங்களிலும் மட்டுப்படுத்தப்பட்டோர் மட்டுமே அழைக்கப்படவேண்டும். என நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 

சுமார் 50 கிராமசேவகர்கள் பிரதேச செயலகத்திற்கு அழைக்கப்பட்டு கடந்த 17ம் திகதி வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.  இதன்போது 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கும், 

வேறு இடங்களில் வீடு உள்ளோருக்கு என வீட்டு திட்ட தெரிவுக்குள் உள்வாங்க தகுதியற்றவர்கள் பெயர்களையும் வீட்டு திட்டம் தேவையானோர் பட்டியலில் இணைக்குமாறு , உத்தியோகஸ்தர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 

வன்னியில் இருந்து சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மீள் குடியேறிய 45 பேருக்கு வீடு தேவை என யாழ்.மாவட்ட செயலகத்திற்கு பெயர் விபரம் அனுப்பட்ட போதிலும் அத்துடன் மேலதிகமாக 155 பேரின் இணைக்குமாறும் 

உத்தியோகஸ்தர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். வீட்டு திட்டத்திற்கு தாம் சொல்லும் பெயர்கள் இணைக்காவிட்டால், அந்த உத்தியோகஸ்தர்களுக்கு நெடுந்தீவு, வன்னி உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என மறைமுகமாக மிரட்டப்பட்டுள்ளனர். 

இவ்வாறாக குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 44 கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் 132 கிராம மட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை கடந்த 17ஆம் திகதி கூட்டப்பட்ட கூட்டத்தின்போது 

சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த மாதம் குறித்த பிரதேச செயலகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு பிரதேச செயலகம் முடக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு