யாழ்.கோப்பாயில் அரச ஊழியர்களின் வயதான தாய் ஊரை எழுப்புகிறார், பொலிஸ் நிலையம்வரை சென்றது சமாச்சாரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் அரச ஊழியர்களின் வயதான தாய் ஊரை எழுப்புகிறார், பொலிஸ் நிலையம்வரை சென்றது சமாச்சாரம்..

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளர்கள் ஆக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களான பிள்ளைகள் தமது தாயாரை கைவிட்டு விட்டனர். என அயல் வீட்டுக்காரர்,

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.கோப்பாய் மத்தியில் வசிக்கும் குறித்த அரச உத்தியோகத்தர்களின் தாயாரான வயோதிபப் பெண் 

பிள்ளைகள் அவருடன் தங்காத நிலையில் இரவு வேளைகளில் விரக்தியில் கத்துவதால் அயலவர்கள் பாதிக்கப்படுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.கோப்பாய் மத்தி சோனெழு பகுதியைச் சேர்ந்த 

அமுதமணி கோதண்டபாணி (வயது- 78) என்ற வயோதிபப் பெண்ணாலே தமது குடும்பம் பாதிப்பதாக தெரிவித்துள்ளார். மூன்று பிள்ளைகள் இருந்தும் அவர்கள் திருமணம் முடித்து சென்றுவிட்டதால் தாயை சரியாகப் பார்க்க முடியாமல் போனதால் 

இந்தத் தாய்க்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை திட்டித் தீர்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது."பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு " என்பதற்கு உதாரணமாக தாயை சரியாகப் பார்க்காமல் 

 தாயுடன் ஒரு பிள்ளை கூட தொடர்ச்சியாக தங்காமல் விட்டு விட்டு தாய்க்கு இந்த நிலைமை வந்ததும் பக்கத்து வீட்டுக்காரரால் தான் தாய்க்கு பிரச்சினை என்று சாட்டு போக்கு கூறுகின்றனர். பக்கத்து வீட்டுக்காரர் 

கோப்பாய் பிரதேச செயகத்தில் முறையிட்டும் பயன்கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். இன் நிலையில் குறித்த தாயின் பிள்ளைகள் அழைத்த கோப்பாய் பொலிசார் இயலாத தாயை பார்ப்பது பிள்ளைகளின் கடமை 

அதை தாங்கள் சரிவர செய்ய வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு