மாற்றுத்திறன் குழந்தைகளை தேடி தத்தெடுத்து வளர்க்கும் இளைஞர்!!

ஆசிரியர் - Editor II
மாற்றுத்திறன் குழந்தைகளை தேடி தத்தெடுத்து வளர்க்கும் இளைஞர்!!

ஐரோப்பாவின் பிரிட்டனில் ஹட்டர்ஸ்பீல்டு நகரில் வசிக்கும் 37 வயதான ஒருவர் மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளை தேடிச் சென்று தத்தெடுத்து பாசமாக வளர்த்து வருகின்றார். 

அவர் தனது 21 வயதில் மாற்றுத் திறன் குழந்தை ஒன்றை தத்தெடுத்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 மாற்றுத் திறனாளி குழந்தைகளை தத்தெடுத்தார். 

இது குறித்து பென் கார்பென்டர் கூறியதாவது:- அன்பும் ஆதரவும் தேவைப்படும் மாற்றுத் திறன் குழந்தைகளை விரும்பித் தத்தெடுத்து வளர்க்கிறேன். இத்தகைய குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினமான காரியம். 

எனினும் அவர்களைப் பராமரித்து அன்பு செலுத்துவதில் தனி மகிழ்ச்சி கிடைக்கிறது. பெரிய குடும்பம் அமைய வேண்டும் என்பது என் கனவு என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு